சாத்தியமானது எவ்வாறு :

விழுப்புரம் மாவட்டம் பெற்ற மகத்தான தேர்ச்சியின் பின்னணியில்  பல சிறந்த திட்டங்களும், செயல்பாடுகளும் அடங்கியுள்ளது.

தமிழக முதல்வரின் கட்டளைகளுக்கு இணங்க தமிழக கல்வித்துறையின் அனைத்து திட்டங்களும் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் முறையான செயல்பாடுகளால் மாணவர்கள் அதிக தேர்ச்சி பெறமுடிந்தது.

மற்ற எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இவ்வாறு ஒவ்வொரு பள்ளியிலும் கடைபிடிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் சரியான முறையில் கற்பிக்கப்பட்டது
மேலும் 10ஆம் ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு  சிறப்பு வகுப்புகள் செம்மையான முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது.

நல்ல முறையில் கற்கும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 100% தேர்ச்சி பெறுவது எப்படி என்பது போன்ற பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.

மேலும் தேர்வுக்கு சில மாதங்கள் முன்பு சுமார் 700 மாணவ மாணவிகளுக்கு ஒருவார பயிற்சி வகுப்புகள் ,உணவு மற்றும் தேர்வு நேர பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவ்வாறாக விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ,மாவட்ட கல்வி அலுவலகர்கள் ,பணியாளர்கள்,ஆசிரியர்கள் ஒன்று சேர்ந்து இம்மாவட்ட மாணவ மாணவியரின் வாழ்வினை  மேம்பட வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.