விழுப்புரம் மாவட்டம்

தமிழகத்தின் மிகப்பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் மாவட்டம், 30:09:1993 அன்று தென்னாற்காடு மாவட்டத்திலிருந்து பிரிந்து விழுப்புரம் வருவாய் மாவட்டமாக செயல்பட துவங்கியது.இது கிழக்கில் வங்காள விரிகுடா மற்றும் பாண்டிச்சேரியையும் தெற்கில் கடலூர் மாவட்டத்தையும் மேற்கில் சேலம் மாவட்டத்தையும் மற்றும் வடக்கில் காஞ்சிபுரம்,திருவண்ணமலை மாவட்டங்களை தன் எல்லைகளாக கொண்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் 9 வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. விழுப்புரம்
2. செஞ்சிVPM
3. திண்டிவனம்
4. வானூர் வட்டம்
5. திருக்கோவிலூர்
6. உளுந்தூர்பேட்டை
7. சங்கராபுரம்
8. கள்ளக்குறிச்சி
9. சின்னசேலம்

விழுப்புரம் கல்வி மாவட்டம்

பள்ளிக் கல்வித்துறையில்  விழுப்புரம் வருவாய் மாவட்டம் தன்னுள் மூன்று கல்வி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது ,
1.விழுப்புரம் கல்வி மாவட்டம் ,
2.திண்டிவனம் கல்வி மாவட்டம் ,
3.கள்ளக்குறிச்சி கல்வி மாவட்டம்.